திருத்தணி முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று முதல் அக்.31-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற உள்ளன. சஷ்டியின் ஆறு நாள்களும் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு, சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக வரும் அக்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவருக்குத் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழா நாள்களில் நாகஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பக்தி இசை, ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஜெயப்பிரியா, உதவி ஆணையர் விஜயா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


