சந்திர கிரணத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
முழுநேர சந்திர கிரகணம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை கிரகணம் நடைபெறுகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
இதனால் வழக்கமான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம், ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது.
கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படாது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பிரதமர் மோடி பெருமிதம்!

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைப்பு

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


