திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூரில் மாசிப்பெருந்திருவிழா இந்த மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


திருச்செந்தூரில் மாசிப்பெருந்திருவிழா இந்த மாதம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சிகளான ஏழாம் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிககிழமை சிகப்புசாத்தி சப்பரத்திலும், 8-ம் திருவிழாவான சனிக்கிழமையன்று காலையில் வெள்ளைச் சாத்தி சப்பரத்திலும், மாலையில் பச்சை சாத்தி சப்பரத்திலும் சுவாமி எழுந்தருளி ஞாயிற்றுக்கிழமை காலையில் திருக்கோயில் சேர்ந்தார்.
தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சுவாமி; தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் மிக முக்கிய நாளான தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.00 மணிக்கும், தொடர்ந்து காலை 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.25 மணிக்கும் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 9.30 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காலை 11 மணிக்கு நிலைக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...