அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விழா
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புரட்சிநகர் 4 வழிச்சாலை அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை விமர்சியாக நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புரட்சிநகர் 4 வழிச்சாலை அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை விமர்சியாக நடைபெற்றது.
இந்த திருக்கோயில்களின் மஹா கும்பாபிஷேக திருவிழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை முதலாம் கால யாக பூஜை, கணபதி யோகம், தனபூஜை, பூஸ்லாங்க பூஜை, கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து, வாஸ்து சாந்தி யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பனம், ரக்ஷôபந்தனம், கும்ப அலங்காரம், கலாக்ர்ஷனம், கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், 1008 சஷஸ் நவ அர்ச்சனை, பூர்னாலதி, நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனையெடுத்து, வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜையும், ஸ்பரிசாகூர்தி, தத்லார்ச்சனை, திராவிடதானம், யாத்ராதானம், கிரஹபீரித்தி பூர்னாலதி ஆகிய பூஜைகள் நடைபெற்றது. பிறகு 6 மணியளவில் இந்த திருக்கோயில்களின் கோபுரகலச மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை பாப்பிரெட்டிப்பட்டி சுவாமிகள் சுப்பிரமணியம், சிவக்குமார் உள்ளிட்டோர் செய்தனர். மஹா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, சாலூர், புரட்சிநகர் 4 வழிச்சாலை, கோட்டமேடு, சாமியாபுரம் கூட்டுசாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...