டாக்டர் அம்பேத்கர்; நாணக் சந்த், தமிழில்: கே. கிருஷ்ணகுமார், பாகம்-1; பக். 400; ரூ. 350; பாகம்-2; பக்.440; ரூ. 350; எஸ். பப்ளிகேஷன்ஸ், 41, மாருதி என்கிளேவ், வசந்தபுரம், மாங்காடு, சென்னை- 600122.
அம்பேத்கரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன் அவருடைய முக்கியமான எழுத்துகள், பேச்சுகள் இரு பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் பிற தலைவர்களின் கட்டுரைகள், பேச்சுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
வட்டமேஜை மாநாடு, மகாத்மாவின் உண்ணாவிரதம் குறித்தெல்லாம் விவாதிப்பதுடன் மகாத்மா காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான உரையாடலும் தரப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் அரிய எழுத்துகளில் ஒன்றான தீண்டப்படாதோர் குறித்த தகவல்களுடன், சேரி வாழ்வோர், தீண்டப்படாதோர் உடைந்த மனிதர்களே எனப் பல்வேறு விஷயங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
மாட்டிறைச்சி, புத்த மதம் பற்றியெல்லாமும் இவற்றைப் பற்றிய அம்பேத்கரின் கருத்துகளுடன் கம்யூனிஸமும் புத்த மதமும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கமும் இடம் பெற்றிருக்கிறது. இளையபெருமாள் கமிட்டி அறிக்கை, கீழவெண்மணி படுகொலை பற்றியெல்லாம் நினைவுகூருவதுடன், ஹரிஜனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; விவசாயத் தொழிலாளர் சட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காத்தமுத்து ஆற்றிய உரை முழுவதுமாகத் தரப்பட்டிருக்கிறது.
தலைமை வகிக்க அழைக்கப்பட்டுப் பின்னர் மறுக்கப்பட்ட லாகூர் ஜாத் பட் தோடக் மண்டலுக்காக தயாரித்த ஜாதி ஒழிப்பு குறித்த அம்பேத்கரின் உரை முழுவதுமாக நூலில் இடம் பெற்றிருக்கிறது.
ஹிந்து மதத் தத்துவமும் மனு தர்மமும் பற்றித் தெரிவிப்பதுடன் அம்பேத்கர் குறித்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, கோ. சாமிதுரை போன்றோரின் எழுத்துகளும் நூல்களின் பகுதிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
நூலின் இவ்விரு பாகங்களிலும் பெரும்பகுதியாக இடம் பெற்றிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், தீண்டாமை, ஹிந்து மதத் தத்துவம், புத்தம் தொடர்பான அம்பேத்கரின் எழுத்துகளும் உரைகளும் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்! - விஜய் புகழஞ்சலி
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி
நீதியை நிலைநாட்டுவோம்! அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


