அம்பேத்கரின் கொள்கைகளைப் பாதுகாக்க கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி அம்பேத்கர் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், ”பாபாசாகேப் டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பை மட்டும் வழங்கவில்லை. நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் மீது அமைந்த வலிமையான இந்தியா என்ற கனவை அவர் நமக்கு அளித்தார்.
ஆனால், இன்று சில சக்திகள் அம்பேத்கரின் மரபையும் பாரம்பரியத்தையும் பலவீனப்படுத்தத் திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஜனநாயக அமைப்புகள் உள்ளீடற்றதாக ஆக்கப்படுகின்றன. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சமத்துவ சிந்தனை மீது தாக்குதல் நடைபெறுகின்றது.
இந்த நாடு அம்பேத்கரின் கொள்கைகளால் கட்டப்பட்டது. அதனைப் பாதுகாக்க நான் என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்பேத்கரின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம். அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Rahul Gandhi vows to defend Ambedkar’s ideals ‘till last breath’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


