மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சிலப்பதிகாரம் எளிய உரை

இத்தகைய சிறப்பு வாய்ந்த காப்பியத்தை எளிமைப்படுத்தி தர முற்பட்டிருப்பது இளைய தலைமுறையிடம் சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.

News image
Updated On :9 மார்ச் 2026, 7:12 am

சிலப்பதிகாரம் எளிய உரை - கலைமாமணி கு.கணேசன்; பக்.432; ரூ.450; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 021, ✆ 93805 30884.

சேர இளவல் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியமாகும். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சுற்றி வரும் காப்பியம் என்பது மட்டுமல்லாது பிற மொழி இலக்கியங்களைத் தழுவாமல் எழுதப்பட்ட காப்பியம் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழின் இரட்டைக் காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன.

சிலப்பதிகாரத்துக்கு முப்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இதுகாறும் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் ச.வே.சுப்பிரமணியன், புலியூர் கேசிகன், புலவர் தமிழமுதன், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் எழுதிய உரைகள் குறிப்பிடத்தக்கவை.

இதுவரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட உரைகளைத் தழுவியே இந்நூல் எழுதப்பட்டது எனினும், அவற்றை எளிமைப்படுத்தி புதிய விளக்கங்கள் தரும் முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டுள்ளார்.

உலகம் தோன்றிய காலம் முதலே புராண, இதிகாச, காப்பியங்கள் போற்றப்படுகின்றன. அவை மண்ணுக்கேற்ப மாறுபட்டிருந்தாலும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது.

இளங்கோ அடிகள் தமிழுக்கு அளித்த சிலப்பதிகாரம் உலகத்து சிறந்த நூல்களில் ஒன்றாக அமைவதோடு, அவற்றுள் ஒளிமிக்கதாயும், தனிச் சிறப்பு வாய்ந்ததாகவும் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காப்பியத்தை எளிமைப்படுத்தி தர முற்பட்டிருப்பது இளைய தலைமுறையிடம் சிலப்பதிகாரத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.