அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஞானப் புகழ்ச்சி போதமும் பதமும்

அனைத்துப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ள திருக்குர்ஆனின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக எல்லாப் பாடல்களுக்குமே விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

News image
Updated On :29 ஜூன் 2026, 7:47 pm IST

ஞானப் புகழ்ச்சி போதமும் பதமும்- தக்கலை பீர்முஹம்மது ஸாஹிப் காமில் வலி; பக். 512; ரூ. 500; காதிரியாதுல் இத்ரூஷியா டிரஸ்ட், மதுரை. ✆ 94431 25786.

இறைவனை வெளியே தேடாமல், நமக்குள்ளே உறைந்திருக்கும் அந்த ஒளி வடிவை நமக்கு உணர்த்துவதே ஞானவான்களின் குணாதிசியங்கள். நிபந்தனையற்ற சரணாகதியும், அதற்கு அடிப்படையாக இருக்கும் தூய அன்பும்தான் அதற்கான வழியாக ஞானவான்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்தான் தக்கலை பீரப்பா.

சூஃபித்துவ உண்மைகளை உணர்த்தும் விதமாக அவர் இயற்றிய 686 பாடல்களின் தொகுப்புதான் இந்த ஞானப் பொக்கிஷம். இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் பிணைப்பை உணர்ந்து அந்த இறை நிலையிலேயே தன்னைப் பொருத்தி வைத்திருப்பதுதான் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இறைவன் பிறப்பித்திடும் உத்தரவு.

முறையாக யாரிடமும் கல்வி கற்காமல், மெய்ப்பொருளையே ஆசானாகப் பற்றி கற்றார்க்கும் வசப்படாத ஞான ரகசியங்கள் முத்து முத்தாக மிளிரச் செய்திருக்கிறார் இறைநேசர் தக்கலை பீரப்பா. எல்லா அரபி வார்த்தைகளுக்கும் அகர வரிசைப்படி பொருள் இடம்பெற்றுள்ளது இன்னும் சிறப்பு.

அனைத்துப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ள திருக்குர்ஆனின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக எல்லாப் பாடல்களுக்குமே விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

சைவ சித்தாந்த கோட்பாடுகள், இறை ரகசியங்களை வெளிச்சமிடும் சித்தர் பாடல்களையும் அடிக்குறிப்புகளாகக் காண்பித்திருப்பதன் மூலம் இறைநேசர்களுக்கு மதம் என்பதே கிடையாது என்ற பேருண்மை வெளிக்காட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.