டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கண்ணகி தெரு கடைசி வீடு

பேசப்படாத பொருண்மைகளைக் கருவாக்கி கதையாக்கிய பல கதைகளும் இதில் உள்ளன.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 11:29 am

தினமணி செய்திச் சேவை

கண்ணகி தெரு கடைசி வீடு - தொகுப்பு எஸ்.காமராஜ், பக்.234; ரூ.240; சரஸ்வதி வெளியீடு, 63, பழைய படந்தால் சாலை, சாத்தூர்-636 203.

கரிசல் இலக்கிய கழகம் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கான பங்களிப்புக்கு வந்த 200 கதைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 26 கதைகளின் தொகுப்பு இந்த நூல். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிடைக்கும் கதைகள், புதைபொருள் ஆராய்ச்சியைவிட அதிக அதிர்ச்சியை தருபவை என்று அணிந்துரையில் சொல்லப்பட்டிருப்பது உண்மையே.

மேலும், பேசப்படாத பொருண்மைகளைக் கருவாக்கி கதையாக்கிய பல கதைகளும் இதில் உள்ளன. சிறுகதைகள் தங்களது இலக்கணத்தை மாறி மாறி தகவமைத்துக் கொண்டு பல காலம் ஆகிவிட்டது. இலக்கணம் மாறினாலும் அது இலக்கியம் ஆகும். அப்படித்தான் இருக்கின்றன இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.

மண் சார்ந்த மக்களின் வாழ்வியலைச் சொல்வதால், முற்றிலும் இறுக்கமான சூழலைச் சொல்லாமல், ரசனைக்கும் நகைச்சுவைக்கும் மெல்லிய உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

கண்ணகி தெரு கடைசி வீட்டில் ஏற்படும் மனமாற்றம்; வல்லினம் மெல்லினமாக மாறும் நிகழ்வு; மறைக்கப்பட்ட உண்மையில் கிள்ளி எறியப்படும் போராளி; விசிட்டிங் கார்டு மூலம் சொல்லப்படும் மாறாத சமூக ஏற்றத் தாழ்வு- இப்படி மண் வாசம் வீசும் கதைகளுக்கு இடையே, வெளிநாட்டில் நடைபெறும் சம்பவமாகவும் ஒரு கதையின் களம் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.