டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குறள் விருந்து! கதை விருந்து!

திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக காவல் துறை அதிகாரி முனைவர் இரா.திருநாவுக்கரசின் மூன்றாவது படைப்பான இந்நூல், தற்போது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 11:23 am

தினமணி செய்திச் சேவை

குறள் விருந்து! கதை விருந்து! - முனைவர் இரா.திருநாவுக்கரசு ஐபிஎஸ்; பக்.240; ரூ.240; குமரன் பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2435 2742.

திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக காவல் துறை அதிகாரி முனைவர் இரா.திருநாவுக்கரசின் மூன்றாவது படைப்பான இந்நூல், தற்போது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் திருக்குறளை மையமாகக் கொண்டு 'திருக்குறளோடு நாம்', 'குறள் இனிது கதை இனிது' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

முப்பாலின் அறம், பொருள் இயல்களில் உள்ள மொத்தம் 108 அதிகாரங்களுக்கு தலா ஒரு குறள் என 108 குறள்களை கதைகள் மூலம் நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார். சங்கப் பாடல்கள், ராமாயணம், மகாபாரதம் எனத் தொடங்கி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், ஆல்ஃபிரட் நோபல் ஆகிய ஆளுமைகளின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி, அவற்றோடு பொருந்திப் போகும் குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கான விளக்கம் மற்றும் அது குறித்த இரு வரி வாசகம் என அமைந்துள்ளது இந்நூல்.

எடுத்துக்காட்டாக, இறைமாட்சி அதிகாரத்தைக் குறிப்பிடலாம். நாட்டை ஆளும் அரசனின் ஆட்சி முறைமை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பட்டியலிடுகிறார். அதில், நல்லாட்சி நடத்தும் மன்னனை மக்கள் தெய்வமாகக் கருதுவார்கள் என்ற குறளை விளக்குமிடத்து, தந்தை, கணவர், மகனை இழந்த பெண் தன் நாட்டு மன்னனைத் தெய்வமாகக் கருதுவதாகவும், அதனால் இன்னும் உயிர் வாழ்வதாகவும் சீன அறிஞர் கன்பூசியஸிடம் தெரிவிப்பது மன்னனின் ஆட்சி சிறப்பைக் காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.