கடந்த நேரமும் நடந்த தூரமும் - சுயசரிதை - நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டில்; பக். 608; ரூ.800; நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, மதுரை-625 020; ✆ 98434 60061.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இறுதியாக உச்சநீதிமன்ற நீதிபதி என்ற அளவில் உயர்ந்த நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
கர்நாடக மாநிலத்தில் மின் வசதி இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, தெரு லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும், மாட்டு வண்டியில் பயணித்தும் கல்வி பயின்று வாழ்வில் உயர்ந்த நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் அனுபவங்கள் ஓர் அறநெறி நூலுக்கு இணையானதாக உள்ளது.
அவரது அனுபவ அறிவுரைகளை அனைவரும் பின்பற்றினால் ஒரு பண்பான சமூகத்தை உருவாக்க முடியும்.
கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு பெண்ணுக்கு வழிவகை செய்தது தொடர்பான தனது தீர்ப்பைச் சுட்டிக்காட்டும் நீதிபதி வி.பாட்டில், சமுதாயத்துக்கு சேவை செய்யும் வகையில் சட்டத்தின் உண்மைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
ராமகிருஷ்ண ஹெக்டே வழக்கு, நீலம் சஞ்சீவ ரெட்டி வழக்கு, குணால் சிங் (எதிர்) மத்திய அரசு (2003) வழக்கு, போபால் விஷவாயு வழக்கு போன்ற பல வழக்குகளில் தனி நீதிபதியாகவும், அமர்வுகளில் இடம்பெற்றும் நீதிபதி வி.பாட்டில் வழங்கிய தீர்ப்புகள் பிற்காலத்தின் பல தீர்ப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 80 ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் பள்ளி, கல்லூரி நினைவுகள், விசாரணை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரையிலான பணி அனுபவங்கள் என வி.பாட்டிலின் நினைவுத் திறன் அபாரமானது. அறம் தவறாமல் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு சுயசரிதை ஏற்படுத்த முடியும். அதை உறுதியாகச் செய்திருக்கிறது நீதிபதி சிவராஜ் வி.பாட்டிலின் சுயசரிதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டுவதை எதிா்த்த வழக்குகள் தள்ளுபடி!

கஃபே கொலை வழக்கு: வடகிழக்கு தில்லியில் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு இளைஞா் கைது

நரேலா மேம்பாலத்தில் நடந்த கொள்ளை வழக்கில் 7 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

