மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் - பா.தீனதயாளன்; பக்.452; ரூ.300; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,சென்னை- 17.

Updated On :18 ஜனவரி 2015, 6:59 pm

எம்.ஜி.ஆர் - பா.தீனதயாளன்; பக்.452; ரூ.300; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,சென்னை- 17.

எம்.ஜி.ஆரின் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட விவரிக்கிறது. நூலின் முகப்பில் சொல்லியிருப்பதைப்போல், திரையுலகம் அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவரின் மலைப்பூட்டும் சரித்திரத்தில், அதிகம் வெளிவராத, ஆனால், ஆதாரப்பூர்வமான தகவல்கள் இந்நூலில் நிரம்பவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவத்தை விவரிக்கும் முதல் அத்தியாயத்திலேயே, அரை வயிற்றுச் சாப்பாடாவது கிடைக்கட்டும் என்று நாடகக் கம்பெனியில் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் காளி என்.ரத்தினத்திடம் பிரம்படி பட்டதும் நெஞ்சைத் தொடுகிறது.

சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஆரம்பகாலத்தில் எந்த அளவுக்குப் பொருளாதாரரீதியாக சிரமப்பட்டார்கள் என்பதையும், அந்தக் கஷ்ட காலத்திலும் எம்.ஜி.ஆர். எத்தகைய இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதையும் இந்த நூலில் சிவாஜியின் பார்வையிலேயே விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்திருக்கும் நூலாசிரியர் பா.தீனதயாளனின் உழைப்பு நூல் முழுக்கத் தெரிகிறது. தரமான காகிதத்தில் அழகுற அச்சடிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.