கலையும் கலைக் கோட்பாடுகளும்
கலையும் கலைக் கோட்பாடுகளும் - ஜி. ஜான் சாமுவேல், பக்.216, ரூ.120, வெளியீடு: ஆசியவியல் நிறுவனம், சென்னை. )044-24501851. கலைப் படைப்புகள், அவற்றின் அடித்தளமான கலைக் கோட்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் ஆய்வு


கலையும் கலைக் கோட்பாடுகளும் - ஜி. ஜான் சாமுவேல், பக்.216, ரூ.120, வெளியீடு: ஆசியவியல் நிறுவனம், சென்னை. )044-24501851.
கலைப் படைப்புகள், அவற்றின் அடித்தளமான கலைக் கோட்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. புறப் பாடல்கள் உயர்குடி மக்களின் வீர வாழ்வைச் சித்திரிக்க, அகப் பாடல்கள் காதல் வாழ்வை விளக்கின. நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் சமுதாயத்தின் விளிம்பு நிலை மனிதர்களை அக, புறப் பாடல்களில் அதிகமாகக் காண முடிவதில்லை என்று புறநானூறும் கலைக் கோட்பாடுகளும் என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆங்கிலக் கல்வியில் இந்திய தேசியக் கலாசாரக் கூறுகள் போதிய அளவு இடம்பெறவில்லை என்கிறார் நூலாசிரியர். இந்தியாவின் மகான்கள், மாவீரர்களின் வரலாற்றைக் கற்றுத் தராத ஆங்கிலக் கல்வியைச் சாடும் பாரதியின் கல்விக் கோட்பாடுகளை கவிதை சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். புறநானூறு, தேம்பாவணி, பாரதியின் கவிதைகள், காட்சிப் படிமங்கள், தற்காலக் கவிதைகளின் கோட்பாடுகளை அறிய உதவும் சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...