திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகிழ்ச்சி

மகிழ்ச்சி - தலாய் லாமா; தமிழாக்கம்: லயன் எம். ஸ்ரீநிவாசன்; பக்.407; ரூ.150; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. )044-24332682. உளவியல் மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் ஹோவார்ட் சி. கட்லர் என்பவர் தலாய் லாமாவு

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:09 am

தஞ்சாவூர் கவிராயர்

மகிழ்ச்சி - தலாய் லாமா; தமிழாக்கம்: லயன் எம். ஸ்ரீநிவாசன்; பக்.407; ரூ.150; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை. )044-24332682.

உளவியல் மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் ஹோவார்ட் சி. கட்லர் என்பவர் தலாய் லாமாவுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் தலாய் லாமா நிகழ்த்திய உரைகளிலிருந்தும் பல கருத்துகள் தொகுக்கப்பட்டு அருமையான நூலாக வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே வராதளவு எளிய நீரோட்டமான நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் அனுபவிக்கும் இன்பம் வேறு; மனம் ஆனந்தம் கொள்ளும் மகிழ்ச்சி வேறு என்பதையும், முறையான பழக்க வழக்கங்களும், கட்டுப்பாடுகளுமே மகிழ்ச்சியைத் தரும் என்றும் உதாரணங்களுடன் சுட்டியிருப்பது பாராட்டத்தக்கது. இன்பம் என்று குறிக்கப்படுவன சிற்றின்பம் உள்ளிட்ட கண நேர இன்பங்கள்தானே தவிர அவை மகிழ்ச்சி என்ற நிலையை அடையப் போதுமானவை இல்லை என்பது உணர்த்தப்படுகிறது. இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வதே மகிழ்ச்சி. அதற்கு ஈடு இணை இல்லை என்பதை நூலாசிரியர் அழகுற விளக்குகிறார். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்கும் இழுக்கா இயன்றதறம் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அந்த அறம்தான் இன்பம் என்பதை தலாய் லாமாவும் உணர்த்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.