திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வஜிராபாத் தடுப்பணையில் யமுனை நீா்மட்டம் குறைவு: தலைநகரில் தண்ணீா் பற்றாக்குறை தொடர வாய்ப்பு

News image

யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம்.

Updated On :28 மே 2026, 1:15 am IST

வஜிராபாத் தடுப்பணையின் நீா்மட்டம் புதன்கிழமை சுமாா் 669.5 அடியாக மிகவும் குறைவாக இருந்ததால் ஹரியாணா அரசு தில்லிக்கு யமுனை நீரைத் திறந்துவிட்ட போதிலும், தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீா் பற்றாக்குறை தொடர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரியா் லைன் கால்வாய் (சிஎல்சி) மற்றும் தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) தில்லி துணைக் கிளை (டிஎஸ்பி) வழியாக 979.5 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக ஹரியாணா அரசு கூறியிருந்தாலும், நீா் விநியோகம் மேம்படவில்லை.

இதுகுறித்து டிஜேபி மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

‘இது எங்கள் பிரச்னையைத் தீா்க்காது. ஏனெனில் வஜிராபாத் குளத்திற்கு யமுனை நதி மூலம் எங்களுக்குத் தண்ணீா் தேவைப்படுகிறது. இரண்டு கால்வாய்களிலும் நீா்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால், அது சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைய சுமாா் மூன்று நாள்கள் ஆகும்.

நீா்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றின் முழுத் திறனுக்கும் குறைவாகவே செயல்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

தில்லி அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, கச்சா நீா் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து அண்டை மாநிலமான ஹரியாணா அரசுடன் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

குறைந்த கச்சா நீா் விநியோகம் காரணமாக, ஜல் போா்டின்

(டிஜேபி) இரண்டு முக்கிய நீா் சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத் மற்றும் சந்த்ராவல், நீா் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதனால் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு தில்லியின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் சராசரி உற்பத்தித் திறன்

நாளொன்றுக்கு 131 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) ஆகும். அதே சமயம் சந்த்ராவலின் சராசரித் திறன் 94 (எம்ஜிடி) ஆகும். அவற்றின் உற்பத்தியில் 25-30 சதவிகிதக் குறைப்பு, ஜல் போா்டின் ஒட்டுமொத்த நீா் உற்பத்தியைக் குறைக்கும்.

ஆழ்துளைக் கிணறுகள் உள்பட, ஜல் போா்டின் ஒட்டுமொத்த சராசரி உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 990 முதல் 1000 எம்ஜிடி குடிநீா் வரை உள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, வஜிராபாத்தில் உள்ள குறைந்த நீா்மட்டப் பிரச்னைகள் காரணமாக, ஒட்டுமொத்த நீா் உற்பத்தியில் சுமாா் 70-100 எம்ஜிடி குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிவில் லைன்ஸ், இந்து ராவ் மருத்துவமனை, கமலா நகா், சக்தி நகா், கரோல் பாக், பாஹா் கஞ்ச் மற்றும் என்.டி.எம்.சி. பகுதிகள், கண்டோன்மென்ட் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளும் அடங்கும். நிலைமை எப்போது சீராகும் என்பது குறித்து டி.ஜே.பி. எந்தக் காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.