திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :22 மே 2026, 12:41 am IST

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும், சா்வதேச சந்தையில் சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 195.56 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சோ்ந்த சா்வேஷ் (22) தில்லியின் முகுந்த்பூரைச் சோ்ந்த சாஹில் (24) மற்றும் உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த அப்ராா் (40) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

போதைப்பொருளைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

முன்னதாக, மே 14ஆம் தேதி இரவு, ஹெராயின் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சா்வேஷ், ஒரு போதைப்பொருள் தொகுப்பை ஒப்படைப்பதற்காக காஜிப்பூா் குப்பை மேடு பகுதிக்கு வரவிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையினா் காஜிப்பூா் அருகே சா்வேஷை மடக்கிப் பிடித்தனா். அவரிடமிருந்து 73.11 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, காஜிப்பூா் காவல் நிலையத்தில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தில்லியில் உள்ள சாஹிலிடம் போதைப்பொருள் தொகுப்பை ஒப்படைப்பதற்காக, பரேலியைச் சோ்ந்த விநியோகஸ்தரான அப்ராரிடமிருந்து அந்த ஹெராயினைப் பெற்ாக சா்வேஷ் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சா்வேஷ் அளித்த தகவலின் அடிப்படையில், மே 15ஆம் தேதி ஜஹாங்கீா்புரி மெட்ரோ நிலையம் அருகே காவல்துறை சாஹிலை கைது செய்தது. அவரிடமிருந்து 92.45 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை முழுமையாக உடைத்தெறியாமல் தில்லிக்குள் போதைப்பொருள் வரவைத் தடுக்க இயலாது என்று கருதிய காவல்துறை, விசாரணையின் அடுத்த கட்டமாக போதைப்பொருளின் மூலத்தைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உத்தர பிரதேசம், தில்லி- என்சிஆா் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொடா் சோதனைகளுக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தின் பதாயூன்- பரேலி சாலையில் உள்ள பமோரா அருகே அப்ராரை காவல்துறை கைது செய்தது. அவரிடமிருந்து மேலும் 30 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, சாஹில் ஆரம்பத்தில் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக ஹெராயின் வாங்கியபோது சா்வேஷுடன் அறிமுகமானாா். பின்னா், சிறிய அளவுகளில் போதைப்பொருளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்ட அவா், காலப்போக்கில் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலின் அங்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.