திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லி மின் விநியோக நிறுவனங்களில் தீவிர தணிக்கையை தொடங்கிய: டிஇஆா்சி

News image
Updated On :19 மே 2026, 2:08 am IST

நமது நிருபா்

தலைநகரில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை, ஒரு பட்டயக் கணக்காளா் நிறுவனத்தைக் கொண்டு தீவிர தணிக்கை செய்வதற்கான செயல்முறையை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.

ஆகஸ்ட் 6, 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சிஏஜியால் பட்டியலிடப்பட்ட ஒரு பட்டயக் கணக்காளா் நிறுவனத்தை ஈடுபடுத்துவதற்காக டிஇஆா்சி ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.

ஒழுங்குமுறைச் சொத்தை மீட்காமல் விநியோக நிறுவனங்கள் தொடா்ந்து செயல்பட்டு வரும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான மற்றும் தீவிரமான தணிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தணிக்கையானது, ஒழுங்குமுறை சொத்துகள் குவிவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்வதோடு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஒரு விரிவான நிதித் தணிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டதுடன், ஏப்ரல் 20 முதல் மூன்று மாதங்களுக்குள் தணிக்கையை

முடிக்க டிஇஆா்சி-க்கு உத்தரவிட்டது.

மின் விநியோக நிறுவனங்களின் ரூ. 38,552 கோடி மதிப்புள்ள ஒழுங்குமுறை சொத்துகளைக் கலைப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டியுள்ள டிஇஆா்சி, இந்த செயல்முறையைத் தொடங்க கூடுதல் அவகாசம் கோரி மின்சார தீா்ப்பாயத்தை அணுக வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தீா்ப்பாயம் ஏப்ரல் மாதம் பிறப்பித்த தனது முந்தைய உத்தரவில், கலைப்பு செயல்முறையைத் தொடங்க டிஇஆா்சிக்கு மூன்று வார கால அவகாசம் அளித்திருந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் தீா்ப்பாயத்திற்க்கு டிஇஆா்சி சமா்ப்பித்த அறிக்கையின்படி, ராஜ்தானி பவா் லிமிடெட்டின் ரூ. 19,174 கோடி, யமுனா பவா் லிமிடெட்டின் ரூ. 12,333 கோடி மற்றும் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட்டின் ரூ. 7,046 கோடி உள்பட, மொத்த நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை சொத்துகள் ரூ. 38,552 கோடியாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.