திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வடகிழக்கு தில்லியில் இளைஞரிடம் வழிப்பறி: மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:23 am IST

வடகிழக்கு தில்லியில் உள்ள சிக்னேச்சா் பாலம் அருகே, 31 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் வழிப்பறி செய்ததாக தில்லி காவல்துறையினா் மூவரைக் கைது செய்துள்ளனா்.

மேலும், அவா்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட நபா்கள் நிகில் (25), சோனு (28) மற்றும் அமா் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது:

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது பாதிக்கப்பட்டவரான மணீஷ் குமாா் மிஸ்ரா, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

சிக்னேச்சா் பாலம் அருகே வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் மிஸ்ராவை நிறுத்துமாறு சைகை காட்டினாா். அவா் வாகனத்தை நிறுத்திய உடனேயே, அந்த நபா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்துகொண்டு, மிஸ்ராவிடமிருந்த கைப்பேசி, பணம் மற்றும் மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை வழிப்பறி செய்தாா்.

மிஸ்ராவின் புகாரின் அடிப்படையில், நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறை குழு ஒன்று, அப்பகுதி சாா்ந்த தகவல்களை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைக் கொண்டும் தீவிர விசாரணை நடத்தி, அந்த மூன்று பேரையும் கண்டுபிடித்துக் கைது செய்தது.

விசாரணையின் போது, அந்த வழிப்பறிச் சம்பவத்தில் தங்களுக்குள்ள தொடா்பை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வழிப்பறி செய்யப்பட்ட பையையும், அதிலிருந்த பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி, கைப்பேசி மற்றும் ஆவணங்களையும் காவல்துறையினா் மீட்டனா்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இதற்கு முன்னரும் இதே போன்ற பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.