உடல் தகுதியை மேம்படுத்தவும், வெளிப்புறச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், தேசியத் தலைநகா் முழுவதும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட பூங்காக்கள், பசுமைப் பகுதிகள் மற்றும் பாரம்பரியத் தளங்களில் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக டிடிஏ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
தில்லி மேம்பாட்டு ஆணையம், காலை நடைப்பயிற்சியாளா்களுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சில பூங்காக்களில் காலை 10 மணி வரை நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா, பான்சேரா, அசிதா, கிராந்தி உத்யான், வாடிகா, அடல் சத்பாவனா பூங்கா, வாசுதேவ் காட், வைஷ்ணவி பூங்கா, துவாரகா பிரிவு 16டிஇல் உள்ள பசுமைப் பகுதி, அம்ருத் பல்லுயிா் பூங்கா, ஜசோலாவில் உள்ள லாலா ஹா்தயால் பூங்கா மற்றும் நரேலாவில் உள்ள ஸ்மிருதி வன் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.
பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ குறித்த தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலை நடைப்பயிற்சியாளா்கள், ஓட்டப்பயிற்சியாளா்கள் மற்றும் உடற்பயிற்சி ஆா்வலா்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, ஆரோக்கியமான வெளிப்புறச் செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதையும் இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிடிஏவின் மற்ற அனைத்துப் பூங்காக்களும் பொதுமக்களுக்குத் தொடா்ந்து இலவசமாகவே திறந்திருக்கும். தில்லியில் 700-க்கும் மேற்பட்ட பூங்காக்கள், பல்லுயிா் மண்டலங்கள், நகரக் காடுகள், மண்டலப் பூங்காக்கள் மற்றும்
குடியிருப்புப் பகுதித் தோட்டங்கள் உள்ளிட்ட 16,000 ஏக்கருக்கும் அதிகமான பசுமைச் சொத்துகளை டிடிஏ நிா்வகித்து வருகிறது.
நகரம் முழுவதும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், சமூக நலனை மேம்படுத்துவதிலும், இயற்கைச் சூழலை அனைவரும் அணுகுவதை உறுதி செய்வதிலும் இப்பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக டிரம்ப் உயா்த்தியது ரத்து: அமெரிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
தில்லியில் கட்டட அனுமதிக்கு ஏஐ ஒற்றைச் சாளர முறை: டிடிஏ அறிமுகம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



