திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுமதியற்ற வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :14 மே 2026, 1:09 am IST

மாநகரச் சாலைகளில் தவறான திசையில் வாகனம் ஓட்டுதல், அனுமதியற்ற வாகன நிறுத்தம் மற்றும் கனரக வாகனங்கள் சட்டவிரோதமாக நுழைதல் ஆகியவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத் தேவை இருப்பதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து புதன்கிழமை சுட்டிக்காட்டியுள்ளாா்.

தில்லி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தில், போக்குவரத்து காவல்துறையின் பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் உள்கட்டமைப்புத் தலையீடுகளை சந்து ஆய்வு செய்தாா்.

மேலும், அமலாக்கம் மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மூலம் இந்த மீறல்களைக் கையாளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா். இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி போக்குவரத்து காவல்துறை 62 முக்கிய போக்குவரத்து நெரிசல் பகுதிகளை அடையாளம் கண்டு, 160-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் தலையீடுகளைத் தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஐடிஎம்ஸ் மூலம் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், சங்கம் திட்டம் வழியாக குடிமக்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், தில்லியின் சாலைகளைப் பாதுகாப்பானதாகவும் மேலும் திறமையானதாகவும் மாற்றுவதற்கு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம், அமலாக்கம் மற்றும் பல்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், வளா்ந்த இந்தியாவுக்கான பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, பாதுகாப்பான, திறமையான மற்றும் அனைவராலும் நம்பப்படும் ஒரு வளா்ந்த தில்லியை உருவாக்குவதற்கு முக்கியமானவையாகும்.

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான தேசிய முன்னுரிமைக்கு இணங்க, நகரத்திற்கான ஒரு நவீன, வெளிப்படையான மற்றும் தடையற்ற போக்குவரத்து மற்றும் பயண அமைப்பை உருவாக்குவதில் அரசின் கவனம் உள்ளது என்று அதில் துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.