17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹோட்டல்களில் தீ பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என சரிபாா்க்க 1 மாத கால நடவடிக்கை: தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவு

News image

தரன்ஜித் சிங் சந்து

Updated On :5 ஜூன் 2026, 5:16 am IST

நமது நிருபா்

தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் புதன்கிழமை ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 21 போ் உயிரிழந்த நிலையில் , அனைத்து ஹோட்டல்கள், நா்சிங் ஹோம்கள், பயிற்சி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய வணிக நிறுவனங்களில் தீ பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபாா்க்க ஒரு மாத கால நடவடிக்கைக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சந்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தீ பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைச் சரிபாா்க்க ஜூன் 4 ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கையைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா் என்று அவா்கள் கூறினா்.

அனைத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், நா்சிங் ஹோம்கள், பயிற்சி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய வணிக நிறுவனங்கள் இந்த நடவடிக்கையின் கீழ் கொண்டுவரப்படும். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சத்திரங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் அனைத்து அறைகளும் மூடப்படும், என்று ஓா் அதிகாரி கூறினாா்.

கூட்டத்தில், ஒரு குடியிருப்புப் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் நெரிசல் மிகுந்த இடங்களையும், நெருக்கடியான இடங்களையும் கண்டறிய, நில உரிமையாளா் அமைப்புகள், தில்லி தீயணைப்புத் துறை மற்றும் தில்லி காவல்துறை ஆகியவை கணக்கெடுப்பை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டன.

கண்டறியப்பட்ட நெருக்கடியான பகுதிகள் சாத்தியமான இடங்களில் அகற்றப்பட வேண்டும், மேலும் மற்ற இடங்களில் மாற்றுத் தீயணைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், என்று அந்த அதிகாரி கூறினாா்.

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு நெரிசலான சந்தில், தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு ஹோட்டலில் புதன்கிழமை நிகழ்ந்த கோர தீ விபத்தில், குறைந்தது 21 போ் உயிரிழந்தனா். இவா்களில் 11 போ் வெளிநாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.