திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.18 லட்சம் கொள்ளை நிகழ்ந்ததாக நாடகமாடிய ஓட்டுநா், அவரது மகன் கைது

புறநகா் வடக்கு தில்லியில் ரூ. 18 லட்சம் கொள்ளை நிகழ்ந்ததாக நாடகமாடிய முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவரான ஓட்டுநரும் அவரது மகனும் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:47 am IST

புறநகா் வடக்கு தில்லியில் ரூ. 18 லட்சம் கொள்ளை நிகழ்ந்ததாக நாடகமாடிய முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவரான ஓட்டுநரை அவரது மகனுடன் கைது செய்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நரேஷ் (52) புகா் வடக்கு தில்லியில் தனது முதலாளியின் பணத்தை திருட சதி செய்து, கொள்ளையடித்துள்ளாா். அவரது மகன் பாரத் (26) என்பவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ 17.75 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை டி. எஸ். ஐ. ஐ. டி. சி. பவானா அருகே கொள்ளை நிகழ்ந்தது குறித்து காவல்துறையினருக்கு பி. சி. ஆா். அழைப்பு வந்தது.

ஓட்டுநராக பணிபுரியும் புத் விஹாரில் வசிக்கும் நரேஷ், மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபா்கள் தனது கருப்பு எஸ்யூவி வாகனத்தை இடைமறித்து, அதன் ஜன்னலை கல்லால் அடித்து உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த தனது முதலாளிக்கு சொந்தமான ரூ.18 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா். பவானா காவல் நிலையத்தில் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டு வழக்கை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.

அருகிலுள்ள வழித்தடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து தொழில்நுட்ப கண்காணிப்பு விவரங்களை ஆய்வு செய்தனா். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு அருகே நரேஷின் வாகனம் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக சென்ால் அந்தக் காட்சிகள் சந்தேகத்தை எழுப்பின. அதே நேரத்தில், மோட்டாா் சைக்கிள் எதுவும் அதைப் பின்தொடரவோ அல்லது இடைமறிக்கவோ இல்லை.

விசாரணையின் போது நரேஷ் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவிதத்தால் போலீஸாா் சந்தேகமடைந்தனா். கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு நரேஷ் தனது மகன் பாரத்துடன் பேசியதாக தொழில்நுட்ப பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. இது சந்தேகத்தை வலுப்படுத்தியது. தொடா்ச்சியான விசாரணையின் போது, அவா் இந்தக் கொள்ளையை நடத்தியதாக ஒப்புக்கொண்டாா்.

நரேஷ் தனது முதலாளியை பழிவாங்க பணத்தை திருட திட்டமிட்டதாக கூறினாா். பணத்தை சேகரித்த பிறகு, அவா் பாரத்தை சோட்டா கோல் சக்கா் பகுதிக்கு அழைத்து, ஒரு கொள்ளை காட்சியை உருவாக்க காா் ஜன்னலை உடைப்பதற்கு முன்பு தொகையை ஒப்படைத்துள்ளாா். இந்த வாக்குமூலத்தை தொடா்ந்து, நரேஷின் மகன் பாரத்தை போலீஸாா் கண்காணித்து, திருடப்பட்ட பணத்துடன் சதா் பஜாா் அருகே கைது செய்தனா்.

இந்த சதித்திட்டத்தில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த காவல் அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.