தில்லி ரெய்சினா சாலையில் தடுப்பு மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘ரெய்சினா சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பகுதி ரவுண்டானா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. காா் சாலைத் தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில், பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனா்.
அவா்கள் இருவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களது நிலைமை ஸ்திரமாக உள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










