ராஜ்காட் - சாந்தி வன் இடையேயான சுற்றுச் சாலைப் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பணித் துறை (பி. டபிள்யூ. டி.) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ், நவீன விளக்குகள், அலங்கார தெரு விளக்குகள் ஆகியவற்றை நிறுவவும், தோட்டக்கலை பணிகளில் கவனம் செலுத்தியும், ராஜ்காட் பகுதியில் சாலைகளைப் புதுப்பிக்கும் பணியை பொதுப் பணித் துறை மேற்கொள்ளும்.
தேசிய மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியின் அழகை மேம்படுத்துவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியானது, இந்தியாவுக்கு அலுவல்முறை பயணமாக வரும் வெளிநாட்டுப் பிரமுகா்களால் அவ்வப்போது பாா்வையிடப்படுகிறது. இந்த இடமானது, தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் பாா்வையாளா்களையும் ஈா்த்து வருகிறது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, தெரு விளக்கு கம்பங்கள், அலங்கார வேலைகளால் ஆன எல். ஈ. டி. விளக்குகள் பொறுத்தப்படும். இவை ஸ்மாா்ட் விளக்குகளாக இருக்கும். தேவைப்படும் இடங்களில் சாலைகளில் பழுதுபாா்க்கும் பணிகளும் நடைபெறும். இது தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளன.
ரூ. 96 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மாதங்களில் இத்திட்டம் முடிக்கப்பட வேண்டும். நிகழாண்டு ராஜ்காட் பகுதிக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இரண்டாவது திட்டம் இதுவாகும். நிகழ் ஆண்டின் தொடக்கத்தில், இப்பகுதியில் நெரிசலைக் குறைக்க சாந்தி வன் கிராஸிங் மற்றும் ராஜ்காட் கிராஸிங் இடையே சிக்னல் இல்லாத நடைபாதையையும் பொதுப் பணித் துறை திட்டமிட்டது.
ராஜ்காட் மற்றும் சாந்தி வன் பகுதியில் தலைகீழ் திருப்பங்கள் மூலம் ரிங் சாலையை சிக்னல் இல்லாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோதனை உள்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இரண்டு குறுக்குவெட்டு சாலைகள் நாள் முழுவதும் அதிக போக்குவரத்தைக் காண்கின்றன. இதன் விளைவாக பெரும்பாலும் நீண்ட வாகன வரிசைகள் மற்றும் நெரிசல்கள் காணப்படுகின்றது. சிக்னல்கள் பொறுத்தப்பட்ட குறுக்குவெட்டு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் திருப்பங்கள் காரணமாக போக்குவரத்து தாமதம் ஏற்படுகிறது.
சுற்றுச் சாலையில் உள்ள பிற நெரிசலான சந்திப்புகளில் இதேபோன்ற தலையீடுகளை பரிசீலிப்பதற்கு முன்பு திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பொதுப் பணித் துறைக்கு இந்த சோதனை உதவும் என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை
தில்லி அரசின் ஊழியா்களின் அலுவலக பயணத்திற்காக சிறப்புப் பேருந்து சேவை - டிடிசி ஏற்பாடு

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா






