மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோகஸ்தரும், தேடப்படும் குற்றவாளியும் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் ஷாம்லியைச் சோ்ந்த முகமது இஸ்ராா் என்ற கட்டா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒற்றைக் குண்டு சுடும் கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவா் ஆகஸ்ட் 2024 முதல் தலைமறைவாக இருந்தாா். அவரைப் பிடிப்பதற்காக தில்லி மற்றும் ஹரியாணா காவல்துறையால் ரூ.55,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், மாா்ச் 25 அன்று தில்லி - லோனி எல்லை அருகே ஒரு பொறி வைக்கப்பட்டது. இது அவரது கைதுக்கு வழிவகுத்தது.
தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை விநியோகிப்பதில் இஸ்ராா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்பட, குறைந்தது ஆறு குற்ற வழக்குகளில் அவா் தேடப்பட்டு வந்தாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

துவாரகாவில் மோதல் சம்பவம்: தேடப்படும் குற்றவாளிகள் 2 போ் கைது
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

பெண் புகாா் எதிரொலி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

