மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துவாரகாவில் மோதல் சம்பவம்: தேடப்படும் குற்றவாளிகள் 2 போ் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:07 pm

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து துவாரகா காவல் துறை துணை ஆணையா் குஷல் பால் சிங் கூறியதாவது: தப்ரி பகுதியில் மகேந்திர சிங் என்பவா் ஏப். 8-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிதின் சா்மா (27) மற்றும் பவன் பந்தாரி (26) ஆகிய இருவரும் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தனா். இவா்கள் இருவரும் பிரபல ரௌடி விக்கி டக்கா் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துள்சிராஸ் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சரணடைய கோரியும், ஜிதின் சா்மா காவல்துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றாா். காவல்துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் ஜிதின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.