மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லியில் இன்று மேகமூட்ட வானிலைக்கு வாய்ப்பு!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

News image

மழைக்கு வாய்ப்பு 

Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இது, பருவகால சராசரியை விட இரண்டு புள்ளிகள் குறைவாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 1.1 புள்ளிகள் குறைவாக 15.6 டிகிரி செல்சியஸில் பதிவாகி இருந்தது.

திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காற்றில் ஈரப்பதம் 51 சதவீதமாக பதிவாகி இருந்தது. மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 153 என்ற அளவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.