தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது பருவகால சராசரியை விட 7.2 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.7 டிகிரி அதிகமாக 16.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
சனிக்கிழமை, நகரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாா்ச் முதல் வாரத்தில் மிகவும் வெப்பமான நாள் பதிவாகி இருந்தது. பகல்நேர வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸை எட்டியது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 90 சதவீதமாகவும் மாலை 5.30 மணி அளவில் 29 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, நகரில் காற்றின் தரம் மாலை 4 மணி நிலவரப்படி மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 247 ஆக இருந்தது.
திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 17 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.
தொடர்புடையது

தலைநகரில் 32.7 டிகிரி வெப்பநிலை பதிவு! மிதமான பிரிவில் காற்றின் தரம்!!

தில்லியில் மேகமூட்டமான சூழல்: காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேற்றம்

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


