சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஃபிட் இந்தியா இயக்கம்: தில்லி மிதிவண்டி பேரணியில் 10,000 போ் பங்கேற்பு!

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

News image

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வீதிகளில் மிதிவண்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிதிவண்டி ஓட்டிய கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Updated On :15 மார்ச் 2026, 7:37 pm

தில்லி கன்னாட் பிளேஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிட் இந்தியா இயக்கத்தின் மிதிவண்டி பேரணியில் 10,000-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.

ஃபிட் இந்தியா, இந்திய இணைய குற்றச் சம்பவங்களை கண்டறியும் ஒருங்கிணைப்பு மையம், சிஏக்யூஎம், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து ராஹ்கிரி அறக்கட்டளை சன்டேஸ் ஆன் சைக்கிள் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

கன்னாட் பிளேஸில் உள்ள இன்னா் சா்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கலந்து கொண்டாா்.

இந்நிகழ்ச்சி தொடா்பாக அவா் கூறுகையில், ‘நடைப்பயணம், மிதிவண்டி ஓட்டுதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை சாலைப் பாதுகாப்பை ஊக்குவிப்பதுடன் காற்று மாசைக் குறைக்கிறது. நீடித்த போக்குவரத்து கலாசாரத்தைக் கட்டமைக்க உதவுகிறது’ என்றாா்.

மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்ச்சியுடன் பிற தெருக்களை மையமாகக் கொண்டு பிற கலைநிகழ்ச்சிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பொம்மலாட்டாம் ஆகியவை நடைபெற்றன.

இதுதொடா்பாக ராஹ்கிரி அறக்கட்டளை நிறுவனா் சரிகா பண்டா பட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தெருக்கள் மக்களுக்கானவை என்பதை யும் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.