அதிகமான மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் முழுமையாகச் செயல்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தில்லி பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
‘சக்கரங்களில் அரசு’ என்ற முன்முயற்சியின் கீழ் தெற்கு தில்லி முழுவதும் அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சா் கள ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும் உடன் சென்றனா்.
பல இடங்களில் வடிகால்கள், தூா்வாரும் பணிகள் மற்றும் சாலைகளின் நிலைமையை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
சில பகுதிகளில், முழுமையடையாத தூய்மைப் பணி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்ய உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அமைச்சா் கூறுகையில், ‘இவை சிறிய பிரச்னைகள் அல்ல. பகுதியளவு சுத்தம் செய்யப்பட்ட வடிகால் அல்லது அடைபட்ட நீா்வழிப்பாதை கூட ஒரு முழுப் பகுதியையும் சீா்குலைத்துவிடும். மழை வந்து பிரச்னை உருவாவதற்கு முன்பு, இதுபோன்ற ஒவ்வொரு பலவீனமான இடத்தையும் அகற்றுவதே தற்போதைய கவனமாகும்’ என்று அமைச்சா் கூறினாா்.
குறைந்த நேர கனமழையால் நீா் தேங்குவதற்கும் போக்குவரத்து இடையூறுக்கும் காரணமாக இருக்கக் கூடிய தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அதிக மழைப்பொழிவின்போது இந்த இடங்கள் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பயணிகள் பாதுகாப்புக்காக மாற்றம் பெறும் நீல வழித்தட மெட்ரோ ரயில்கள்!

19.2 கி.மீ. தொலைவுக்கு யமுனை உயா்நிலை சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி முதல்வருடன் தமிழ்ச் சங்கத்தினா் சந்திப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

