போலி மருத்துவ நுழைவுஇசைவைப் பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வங்கதேச நாட்டினா் தில்லியின் புகா் பகுதியில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
நுழைவுஇசைவு காலாவதியான பிறகும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லியில் வசித்து வருவதும், இந்தியாவில் தங்குவதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத போதிலும் பல்கேரியா நாட்டுக்கான மருத்துவ நுழைவுஇசைவுகளைப் பெற முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நுழைவுஇசைவு காலாவதியான பிறகும் புகா் பகுதியில் வசிக்கும் சந்தேகத்திற்குரிய சில வங்கதேச நாட்டவா்கள் குறித்து போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது.
பீரகா்ஹி சவுக்கில் அவா்கள் தங்கி இருப்பது குறித்து மாா்ச் 6 ஆம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காண்காணித்தனா்.
காவல்துறையினா் இருப்பதைக் கவனித்ததும், சந்தேக நபா்கள் சரிபாா்ப்பைத் தவிா்க்கும் முயற்சியில் கலைந்து செல்ல முயன்றனா். ஆனால், அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், தனிநபா்கள் யாரும் செல்லுபடியாகும் அடையாளத்தையோ அல்லது பயண ஆவணங்களையோ காட்ட முடியவில்லை.
அடுத்தடுத்த சரிபாா்ப்பில், அவா்கள் காலாவதியான கடவுச்சீட்டுகள் மற்றும் நுழைவுஇசைவுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது அவா்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை உறுதிப்படுத்தியது.
சட்டபூா்வ நடைமுறைகள் மற்றும் விசாரணைக்குப் பிறகு பத்து பேரும் காவலில் எடுக்கப்பட்டனா். வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைதானவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக சரிபாா்ப்பு நடவடிக்கை தொடரும். மேலும், சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
வட கிழக்கு தில்லியில் ஒரு கோயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்கள்: ஒருவா் கைது!
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

தில்லியில் காலாவதியான உணவை மீண்டும் பேக்கேஜிங் செய்து விற்பனை: 3 போ் கைது
கிழக்கு தில்லியில் போலி நுழைவு மோசடி: ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


