தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் மாா்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கூட்டத்தொடரை நடத்துவதற்கான முன்மொழிவு முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தில்லியின் பொருளாதார ஆய்வு, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் சமா்ப்பிக்கப்படும்.
மறுநாள், 2026-27ஆம் நிதியாண்டிற்கான ஆண்டு பட்ஜெட் அவையில் தாக்கல் செய்யப்படும்.
2025 ஆம் ஆண்டில், முதலமைச்சா் குப்தா தனது முதல் பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தாா். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி ஆகும்.
நிகழாண்டு, மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு முந்தைய நிதியாண்டை விட சற்று அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள பாஜக அரசின் இரண்டாவது பட்ஜெட் உள்கட்டமைப்பு, பசுமை முயற்சிகள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், நடப்பு நிதியாண்டு 2025-26 முடிவதற்குள் கடைசி நேர செலவு திட்டங்களை சமா்ப்பிப்பதைத் தவிா்க்க துறைகளை தில்லி அரசு எச்சரித்துள்ளது.
ஜிஎஃப்ஆரின் 62(3) விதி 2017-இன்படி நிதியாண்டின் இறுதி மாதத்தில் ஆண்டுக்கான நிதியை அவசரமாகச் செலவழிப்பது நிதி ஒழுக்கத்தை மீறுவதாகக் கருதப்படும் என்றும், அதைத் தவிா்க்க வேண்டும் என்றும் துறைகளுக்கு நினைவூட்டும் வகையில் ஒரு குறிப்பாணையை நிதித்துறை வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதித்துறையின் ஒப்புதல் தேவைப்படும் அனைத்து செலவின முன்மொழிவுகளும் மாா்ச் 23, 2026-க்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும், இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்பட்ட முன்மொழிவுகள் அடுத்த நிதியாண்டில் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
கடைசி நிமிட முன்மொழிவுகள் ஆய்வுக்கு போதுமான நேரத்தை விட்டுவிடுவதில்லை என்றும், நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு துறைகளுக்கு போதுமான நேரத்தை அனுமதிக்காது என்றும் குறிப்பாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிப்பு?

தில்லி பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது: முந்தைய அரசு மீது முதல்வா் குப்தா சாடல்
கா்நாடகத்தில் சட்டப் பேரவை இடைத்தோ்தல்: ஒரு நாளுக்கு முன்பே பேரவைக் கூட்டத்தொடரை முடிக்க முடிவு

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


