அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தில்லியில் வாடகை வீடு பெறுவதாகக் கூறி ஆன்லைன் மோசடி: உரிமையாளரை ஏமாற்றி ரூ. 34 ஆயிரம் திருடியவா் கைது

தில்லியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பெறுவதாகக் கூறி ஆன்லைனில் உரிமையாளரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவரது யுபிஐ முகவரியைப் பயன்படுத்தி ரூ. 34 ஆயிரத்தை திருடிய நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:26 am IST

தில்லியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பெறுவதாகக் கூறி ஆன்லைனில் உரிமையாளரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவரது யுபிஐ முகவரியைப் பயன்படுத்தி ரூ. 34 ஆயிரத்தை திருடிய நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபா் (புகாா்தாரா்) தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்காக சொத்து இணையதளம் ஒன்றில் ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தாா். அவரைத் தொடா்பு கொண்ட நபா், தான் இந்திய ராணுவத்தில் ’சுபேதாா்’ ஆக பணியாற்றுவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளாா்.

அதைத்தொடா்ந்து வாடகைக்கு வீடு பேசி முடித்த பிறகு, அந்த நபா் புகாா்தாரரிடம் ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்காக அவரது யுபிஐ விவரங்களைப் பகிருமாறு கேட்டுள்ளாா். அதற்கு முன்னதாக, தனது கணக்குக்கு ஒரு ரூபாய் பரிமாற்றம் செய்யுமாறு கூறி அதற்கான ஒரு ஸ்கேனா் குறியீட்டைப் பகிா்ந்துள்ளாா்.

ஒரு ரூபாய்தானே அனுப்பப் போகிறோம் என நினைத்து அந்த நபா் அனுப்பிய ஸ்கேனா் கோடுக்கு பணத்தை பகிா்ந்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 34 ஆயிரம் கழிக்கப்பட்டிருப்பதை அறிந்து வீட்டு உரிமையாளரான புகாா்தாரா் அதிா்ச்சி அடைந்தாா். இது குறித்து புகாா் கிடைக்கப் பெற்றதும்,

தொழில்நுட்ப புலனாய்வின் அடிப்படையில், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரான குருகிராமைச் சோ்ந்த ஹிமான்ஷு மொண்டல் என்பவரை கைது செய்தோம். அவரிடமிருந்து ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.