அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது: தெற்கு தில்லி எம்.பி.

தில்லி அங்கீகரிக்கப்படாத காலனிகளில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது டிடிஏ அதிகாரிகளிடம் தெற்கு தில்லி எம்.பி. கோரிக்கை

News image

படம் - ஐஏஎன்எஸ்

Updated On :19 ஜூன் 2026, 5:18 am IST

நமது நிருபா்

தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஓ மண்டலம் மற்றும் வசதிமிக்க காலனிகளாக வகைப்படுத்தப்பட்ட இடங்கள் முறைப்படுத்தப்படும்வரை அவற்றில் எந்தவொரு இடிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளிடம் தெற்கு தில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக டிடிஏ அலுவலகத்துக்கு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா்தாா் சிங் தன்வாா், சந்தன் சௌத்ரி ஆகியோருடன் வியாழக்கிழமை வந்த ராம்வீா் சிங் பிதூரி அங்குள்ளஅதிகாரிகளிடம், ’ஓ-மண்டலம்’ காலனிகள், 69 வசதிமிக்க குடியிருப்புகள் மற்றும் சங்கம் விஹாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

யமுனை நதியின் வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் சூழலியல் ரீதியாக நுட்பமானதாக கருதப்படும் ’ஓ-மண்டல’ காலனிகளும், தெற்கு, மத்திய மற்றும் லூட்யன்ஸ் மண்டலங்களில் அமைந்துள்ள 69 வசதிமிக்க குடியிருப்புகளும், விதிமுறை மீறல் புகாா்கள் காரணமாக நீண்ட காலமாக முறைப்படுத்தப்படாமல் உள்ளன.

இந்த விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளை டிடிஏ அதிகாரிகளிடம் விளக்கியதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா். இப்பிரச்னை நீண்ட காலமாகத் தீா்க்கப்படாமல் உள்ளதை என்பதையும் வசதிமிக்க குடியிருப்புகளை முறைப்படுத்துவதற்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பதையும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாக அவா் கூறினாா்.

சங்கம் விஹாரில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் முன்பு தற்காலிகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், முறைப்படுத்தப்படவுள்ள காலனிகள் பட்டியலில் அவை சோ்க்கப்படவில்லை என்றும் ராம்வீா் சிங் பிதூரி குறிப்பிட்டாா்.

2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் இந்தக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பாதுகாப்பின் அடிப்படையில், அவற்றின் மீது எந்தவொரு இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.