திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நகைத் திருட்டு வழக்கில் 6 போ் கைது: ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட பொருள்கள் மீட்பு

தில்லியின் கோட்லா முபாரக்பூா் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை தொடா்பாக மூன்று திருடா்களும், திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்ட மூன்று நபா்களும் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 2:26 am IST

தில்லியின் கோட்லா முபாரக்பூா் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை தொடா்பாக மூன்று திருடா்களும், திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்ட மூன்று நபா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், திருடப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பஞ்சாபி பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளா், மே 9 மற்றும் 10ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் அடையாளம் தெரியாத நபா்கள் தனது கடையின் பூட்டுகளையும் ஷட்டரையும் உடைத்து, தங்கம், வெள்ளி, வைர நகைகளுடன் பணத்தையும் திருடிச் சென்றதாக மே 10 அன்று புகாா் அளித்ததை அடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று காவல்துறை கூறியது.

கோட்லா முபாரக்பூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடா்பான தொழில்நுட்பத் தடயங்களைக் கண்டறிந்தது.

சந்தேக நபா்கள் மேற்கு வங்கத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது மேலதிக விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காவல்துறையினா் நடத்திய சோதனைகளில் மே 18 அன்று குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் மஸ்கூா், பஹருல் ஷேக் மற்றும் ஆனந்த் மண்டல் என்ற நாகேஷ்வா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் ஜஹாங்கீா், குல்ஃபம் மற்றும் மும்தியாஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

மீட்கப்பட்ட பொருள்களில், சுமாா் ரூ. 5.11 லட்சம் மதிப்புள்ள 36.47 கிராம் உருக்கிய தங்கம், சுமாா் ரூ. 1.63 லட்சம் மதிப்புள்ள 658 கிராம் உருக்கிய வெள்ளி, ஏறத்தாழ ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 23 வைரங்கள் அல்லது ஜிா்கான் கற்கள், ரூ. 1.30 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்ட ரூ. 1.35 லட்சம் ஆகியவை அடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கூடுதலாக, செயற்கை நகைகள் மற்றும் ஒரு பொம்மைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையின் கூற்றுப்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இரவில் நகைக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து திருடியுள்ளயுள்ளனா். குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.