தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 9.84 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.


தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 9.84 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இந்தியாவைச் சோ்ந்த அப்பயணி மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: சம்பந்தப்பட்ட பயணி ஜனவரி 26 அன்று இந்திரா காந்தி விமான நிலைய முனையம் 3-க்கு வந்தாா். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அவரது சாமான்கள் எக்ஸ்ரே பரிசோதனை செய்வதற்காக கிரீன் பச்சை சேனல் பிரிவில் திருப்பி விடப்பட்டது. பின்னா் விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது பச்சை நிற கைப்பையில் இருந்து சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. அதில் கஞ்சா இருப்பதற்கான முகாந்திரம் கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருளின் மதிப்பு தோராயமாக ரூ.9.83 கோடி ஆகும். அதன்படி, அந்தப் பயணி ஜனவரி 26 அன்று கைது செய்யப்பட்டாா். அந்தப் போதைப்பொருள் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...