டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்!

துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தது தொடர்பாக...

News image
பசை வடிவிலான தங்கம்
Updated On :4 பிப்ரவரி 2026, 6:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக பெண் பயணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபையில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனா்.

அப்போது, துபையிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த சந்தேகத்துக்கிடமான பெண் பயணி ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவா் மறைந்து வைத்திருந்த ரூ. 1.37 கோடி மதிப்பிலான பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அடுத்தடுத்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு வந்த விமான பயணிகளில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை நிறுத்தி மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், வெளிநாட்டு ஹவாலா பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதன்படி, சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் அடுத்தடுத்து விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4.09 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேரை கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.