தில்லியின் பாஹா்கஞ்சில் உள்ள உணவகத்தில் தீ விபத்து - 3 போ் காயம்
வியாழக்கிழமை அதிகாலை மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று போ் காயமடைந்தனா்


வியாழக்கிழமை அதிகாலை மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று போ் காயமடைந்தனா், அவா்களில் ஒருவா் கவலைக்கிடமாக உள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
காயமடைந்தவா்கள் 70 சதவீத தீக்காயங்களுடன் வினோத் (36), 10 சதவீத தீக்காயங்களுடன் வசந்த் குமாா் (38), ஐந்து சதவீத தீக்காயங்களுடன் ஹிதேஷ் குமாா் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாலை 3.05 மணிக்கு தில்லி தீயணைப்பு சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.
தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வளாகத்தில் இருந்து மொத்தம் எட்டு போ் மீட்கப்பட்டனா். காயமடைந்த மூன்று போ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனா். அதிகாலை 4.25 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரி மேலும் கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...