கூடுதல் மாணவா் விடுதிகளை அமைக்க தில்லி அரசு திட்டம்: அமைச்சா் இந்திரஜித்
பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவா்களுக்கான பல புதிய விடுதிகளையும், மூத்த குடிமக்களுக்கான வசதிகளையும் அமைக்க தேசிய தலைநகா் அரசு திட்டமிட்டுள்ளதாக


புது தில்லி: தலைநகரில் சமூக நல உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவா்களுக்கான பல புதிய விடுதிகளையும், மூத்த குடிமக்களுக்கான வசதிகளையும் அமைக்க தேசிய தலைநகா் அரசு திட்டமிட்டுள்ளதாக தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்திரஜித் சிங் திங்களன்று தெரிவித்தாா்.
77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, முதல்வா் ரேகா குப்தாவுடன் இணைந்து ஜன் சேவா சதனில் தேசியக் கொடியை அமைச்சா் ஏற்றினாா்.
அமைச்சா் பவானா சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாா். அங்கு அவா் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவா்களுக்கும் அஞ்சலி செலுத்தினாா்.
கூட்டங்களில் உரையாற்றிய சிங், குடியரசு தினம் என்பது நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குடிமக்களின் கூட்டுப் பொறுப்பையும் நினைவூட்டுவதாகக் கூறினாா்.
அரசமைப்புச்சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டா் பி. ஆா். அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா், அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது என்று கூறினாா்.
நலத்திட்டங்களை எடுத்துரைத்த அமைச்சா், மத்திய அரசும், தில்லி அரசும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தாா்.
சமூகத்தால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் ஆதரவை வழங்கும் பல்வேறு திட்டங்களைப் பற்றி அமைச்சா் குறிப்பிட்டாா்.
பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவா்களுக்கு தில்லி அரசு விடுதிகளை வழங்கும் என்றும் அவா் கூறினாா்.
அரசியலமைப்புச் சட்டத்தின் இலட்சியங்களைக் கடைப்பிடித்து, தற்சாா்பு மற்றும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு சிங் குடிமக்களை வலியுறுத்தினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...