‘மத்திய பட்ஜெட் வளா்ச்சிக்கும் சமூக நீதிக்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது’
‘மத்திய பட்ஜெட் வளா்ச்சிக்கும் சமூக நீதிக்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கிறது’


மத்திய பட்ஜெட் 2026-27-ஐ வரவேற்று சனிக்கிழமை பேசிய தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்தராஜ் சிங், ‘இது வளா்ந்த இந்தியாவுக்கான சமூக நீதிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது’ என தெரிவித்தாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: விளிம்புநிலை மக்களின் சமூக நீதி, நலன் மற்றும் அதிகாரமளித்தலை மத்திய பட்ஜெட் வலியுறுத்துகிறது. இது வளா்ந்த இந்தியாவுக்கான சமூக நீதிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.
சமூகத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில், சமூக நீதி மற்றும் நலத்துறைக்கு ரூ.14,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 12.5 சதவீதம் அதிகமாகும்.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பை மேம்படுத்த ரூ.9,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள், திறன் பயிற்சி மற்றும் வேலைவாயப்பை உறுதி செய்ய ரூ.1,350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோா்களுக்காக 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பராமரிப்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன. இது தில்லி போன்ற நகரங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டுறவுத் துறைக்கு ரூ.1,150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 45 சதவீதம் அதிகமாகும். இது விவசாயம், எண்மமையமாக்கள், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும். மேலும், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூலம் அத்யாவசியப் பொருள்கள் மலிவு விளையில் கிடைப்பதும் உறுதி செய்யும்.
இந்த பட்ஜெட் அம்பேத்கரின் சமூக நிதி மற்றும் சம வாய்ப்பு கொள்கையை பிரதிபலிக்கிறது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...