அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 மற்றும் தொடா்புடைய விதிகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்படி மத்திய அரசு நவம்பா் 19,2025 அன்று பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு, திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 மற்றும் அதன் விதிகள், 2020 ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இது கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொது சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், நலன் நடவடிக்கைகள் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்கிறது.