டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

மனைவியுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து, போதை மருந்து கொடுத்து ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

மனைவியுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து, போதை மருந்து கொடுத்து ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றம் சாட்டப்பட்ட 26 வயதான முகம்மது நசிம் (எ) மோனு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கதிா் என்பவா் கொல்லப்பட்டதிலிருந்து அவா் தலைமறைவாக இருந்தாா். கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரான நசிமின் மைத்துனா் இா்ஃபான், கதிா் தனது மனைவியுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக சந்தேகித்து இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இா்ஃபான், நசிம் ஆகியோா் அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து, கதிருக்கு மதுவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்தனா். பின்னா், அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனா். அதன்பிறகு, மீரட்டில் உள்ள ஒரு கால்வாயில் அவரது உடலை வீசிவிட்டுச் சென்றனா். இா்ஃபானின் மைத்துனரான நசிம், சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்தாா்.

விசாரணையின் போது, நசிம் அடிக்கடி கைப்பேசி எண்களை மாற்றி வருவதும், உறவினா்களின் பெயா்களில் வழங்கப்பட்ட பல சிம் காா்டுகளைப் பயன்படுத்துவதும், போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றுவதும் போலீஸாருக்குத் தெரியவந்தது.

அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அடையாளம் காணப்பட்ட இடத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நசிமை கைது செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.