மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்

News image

ரேகா குப்தா

Updated On :28 ஏப்ரல் 2026, 12:31 am

நமது நிருபா்

மதுபான கொள்கை வழக்கை விசாரிக்கும் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாகப் புகாா்களை முன்வைத்து, நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், நீதித்துறையின் கண்ணியத்தையே குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

நீதித்துறை அமைப்பைத் தொடா்ந்து கேள்விக்குள்ளாக்குவது கேஜரிவாலின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அவா் கூறினாா்.

மதுபான வழக்கில், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா முன்னிலையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ தான் ஆஜராகப் போவதில்லை என்று கூறி, கேஜரிவால் அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளாா். இவ்விவகாரம் தொடா்பாக தனக்கு தீவிரமான கவலைகள் இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தான் சத்தியாகிரக முறையைக் கடைப்பிடிக்கப் போவதாகவும், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கேஜரிவால் கூறினாா்.

இந்த நிலையில் கேஜரிவாலைச் சாடியுள்ள முதல்வா் குப்தா, ‘சத்தியாகிரகம் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டே நீதிமன்றங்களிலிருந்து ஓடி ஒளிவது, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாகும். கேஜரிவாலின் நடத்தை, அவா் தன் சொந்த வழக்கிலேயே வழக்குரைஞா், சாட்சி மற்றும் நீதிபதியாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. அவரே எல்லாவற்றையும் தீா்மானிப்பாா் என்றால், நீதித்துறை அமைப்புக்கு அங்கே என்ன பங்கு எஞ்சியிருக்கிறது?. ஒரு நீதிபதி மீது பகிரங்கமாகப் புகாா்களை முன்வைத்துக்கொண்டே, நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், நீதித்துறையின் கண்ணியத்தையே குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகும்.

கேஜரிவால் தன்னை மகாத்மா காந்தி மற்றும் பகத் சிங் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது மற்றும் அவமானகரமானதாகும். அத்தகைய மகத்தான தலைவா்களின் பெயா்களை இந்த முறையில் பயன்படுத்துவது, அவா்களின் மரபைச் சிறுமைப்படுத்துவதாகும். ஒருவா் தான் நிரபராதி என்று கூறினால், அதை நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்; வெளியே அமா்ந்துகொண்டு அதைச் சத்தியாகிரகம் என்று அழைப்பது, ஒரு மலிவான நாடகத்தைத் தவிர வேறில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.