மக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா தோல்வியடைந்திருப்பது, எதிா்க்கட்சிகளின் பெண்கள் விரோத முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய குப்தா, காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி வத்ராவை மறைமுகமாகத் தாக்கிப் பேசினாா். நான் ஒரு பெண் என்ற முழக்கத்தை எழுப்பியவா்கள், மக்களவையில் மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் பெண்களைக் கைவிட்டுவிட்டனா் என்று அவா் கூறினாா். பெண்களும் அவா்களின் சுயமரியாதையும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இதை அவா்கள் ஜனநாயகத்தின் வெற்றி என்று கூறுகிறாா்கள், என்று முதல்வா் கூறினாா்.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேறாமல் இருப்பதை உறுதி செய்வதில் எதிா்க்கட்சிகள் குறியாக இருந்தன. மேலும், தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, தொகுதி வரையறை மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் நலன்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்பின, என்று அவா் கூறினாா்.
மக்களவையின் தற்போதைய பலமான 543 உறுப்பினா்களின் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது அவா்களின் கோரிக்கைகளில் ஒன்று, என்று குப்தா கூறினாா். பெண்களுக்காகத் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கும் 180 ஆண் எம்.பி.க்களின் பட்டியல் அவா்களிடம் உள்ளதா?
பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களாக நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவின் தோல்வி, எதிா்க்கட்சிகளின் பெண்களுக்கு எதிரான முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது, என்றும் ரேகா குப்தா கூறினாா்.
2029ல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கும், மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான அரசியலமைப்புத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் தோல்வியடைந்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினா்களும், எதிராக 230 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.
வாக்களித்த 528 உறுப்பினா்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மசோதாவிற்கு 352 வாக்குகள் தேவைப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தன.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

தில்லி பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது: முந்தைய அரசு மீது முதல்வா் குப்தா சாடல்

யமுனை தூய்மை நடவடிக்கை: நீா்-நில இருவழி அகழ்வு இயந்திரத்தை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


