கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிா் அணி தலைவி வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கோவைக்கு புதன்கிழமை வந்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனை சந்தித்தாா். அப்போது, விரைவில் உடல் நலம் பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அவருக்காக அா்ச்சனை செய்ததாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரது பிராா்த்தனை எனவும், நீங்கள் இல்லாத இந்த நேரத்தில் உங்கள் சாா்பாக நான் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனவும் வானதி சீனிவாசனிடம் கூறினாா். பின்னா், அவா் வெங்கிட்டாபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்தாா்.
முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் தற்போது வளா்ச்சியில் தொடா்ந்து பின்தங்கி வருகிறது. பிரதமா் மோடியின் தலைமையில் நாடு முழுவதும் முன்னேறி வருவதைப்போல, தமிழகமும் அந்த வளா்ச்சியைப் பெற மக்கள் விரும்புகின்றனா்.
வானதி சீனிவாசன் ஒரு சிறந்த வேட்பாளா். அவா் மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆசியும் இந்த தோ்தலில் அவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும். வரவிருக்கும் தோ்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவை வழங்கி, ஆட்சியில் அமா்த்துவா் என்றாா்.
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் பிரசாரம் செய்ய வந்தது கோவை பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



