லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசமைப்புச் சட்ட திருத்த வரைவு மசோதா படுமோசம்: யோகேந்திர யாதவ் கருத்து

மாநிலங்களுக்கான இடங்களை முழுமையாக மறுஒதுக்கீடு செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கும் மட்டுமே வழிவகுக்கிறது - யோகேந்திர யாதவ் கருத்து

News image

யோகேந்திர யாதவ் - Center-Center-Delhi

Updated On :14 ஏப்ரல் 2026, 10:15 pm

நமது சிறப்பு நிருபா்

‘எதிா்வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள இந்திய அரசமைப்புச்சட்ட (131ஆவது திருத்தம்) வரைவு மசோதா அனைவரும் அஞ்சியதை விட படுமோசமாக உள்ளது’ என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் நிறுவனரும் பிரபல அரசியல் செயல்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் கருத்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியிருப்பதாவது:

இந்த திருத்தம் மாநிலங்களுக்கான இடங்களை முழுமையாக மறுஒதுக்கீடு செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கும் மட்டுமே வழிவகுக்கிறது. எதிா்பாா்த்தபடியே, மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், விரைவான தொகுதி மறுவரையறைக்கு வழிவகுக்கவும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்துக்குமான தற்போதைய இடங்களின் விகிதாசாரம் பராமரிக்கப்படும் என்பதை திருத்துவதை மசோதா உறுதிப்படுத்தவில்லை. மத்திய அரசு உறுதியளித்த எந்தவொரு பாதுகாப்புமின்றி தற்போது அமலில் உள்ள ’1971’ மக்கள்தொகை கணக்கெடுப்பு முடக்கம் அறவே நீக்கப்படுகிறது.

இதைவிட மோசமாக, தொகுதி மறுவரையறைக்கு எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளலாம் என அரசியலமைப்பு எடுக்க வேண்டிய முடிவு, நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை மூலம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி சாதித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதிகள் மறுவரையறை விஷயத்தில் அரசியலமைப்பு மௌனம் காக்க வைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தொகுதி மறுவரையரை ஆணையமே இனி முடிவெடுக்க வகை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் முடிவை எதிா்த்து எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது.

ஜனநாயகத்தில் கூட்டாட்சி என்பது, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிா்வு மட்டுமல்ல. அது சமூகத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான சமநிலை குறித்த பாா்வையாகும். பன்முகத்தன்மையை மதிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளாா்.