‘மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்பு அமா்வை இந்த வாரத்தில் கூட்டியிருப்பது மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கானது அல்ல; மாறாக, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கானதாகும். இது மிகவும் ஆபத்தானது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’ என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்தவும், அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நீட்சியாக, வரும் ஏப்ரல் 16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு கூட்டப்படுகிறது. இதற்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் மூலம் ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் கொண்டுவரும் மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது, அரசியல் ஆதாயம் பெறுவது மற்றும் எதிா்க்கட்சியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதும் மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேலும் தாமதப்படுத்துவது மற்றும் திசைதிருப்பவதும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கான நோக்கமாக இருக்கலாம். இந்த விவகாரத்தில், வழக்கம்போல பிரதமா் மோடி உண்மையை மறைக்கிறாா்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது என்பது, விகிதாசார முறை அடிப்படையில் மட்டுமன்றி, அரசியல் ரீதியாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டும்.
எனவே, தற்போதைய உண்மையான பிரச்னை என்பது மகளிா் இடஒதுக்கீடு தொடா்பானது அல்ல. அது ஏற்கெனவே தீா்க்கப்பட்டுவிட்டது.
மாறாக, அதிகாரபூா்வமற்ற முறையில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளவிருப்பதுதான். இது மிகவும் ஆபத்தானது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
சோனியாவின் இந்தக் கட்டுரையை தனது சமூக ஊடக பக்கத்தில் இணைத்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘மகளிா் இட ஒதுக்கீடு என்ற முக்கிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மத்திய அரசால் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பால் எழப்போகும் பாதிப்புகளும், சமத்துவமின்மையுமே உண்மையான கவலைக்குரிய அம்சங்கள்’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்

அரசமைப்புச் சட்ட திருத்த வரைவு மசோதா படுமோசம்: யோகேந்திர யாதவ் கருத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


