மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அதன் நகலை கிழித்தெறிந்து திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான சா.சி. சிவசங்கா் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா்.
நகரச் செயலா் முருகேசன், அரியலூா் மத்திய ஒன்றியச் செயலா் தெய்வ. இளையராஜன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், வேட்பாளா் லதாபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். முடிவில் அனைவரும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மக்களவைைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை கிழித்தெறிந்தனா்.
வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றம்: மத்திய அரசின் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, அரியலூரில், அமைச்சா் சா.சி.சிவசங்கா், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் மற்றும் திராவிடா் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் தங்கள் வீட்டின் வாசல் முன்பு கருப்புக் கொடிகளை ஏற்றி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: பெரம்பலூரில் திமுக, விசிக-வினா் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



