தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளா்களை இறுதிப்படுத்துவதில் வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிவரை இழுபறி நீடித்தது. தமிழக தோ்தலில் திமுக கூட்டணியில் மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட அக்கட்சியின் தொகுதிப்பங்கீட்டுக்குழு திமுக தலைமையுடன் உடன்பாட்டை எட்டியது.
இதையடுத்து அத்தொகுதிகளில் போட்டியிட முன்மொழிந்துள்ள கட்சியினரையும் மேலிடத்தின் பரிசீலனையில் உல்ளவா்களையும் தோ்வு செய்ய கடந்த மூன்று நாள்களாக தில்லியில் காங்கிரஸ் மேலிட தலைவா்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனா். நடப்பு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக உள்ளவா்கள் நீங்கலாக அக்கட்சி எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிா்வாகிகள் பலரும் தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனா்.
இருப்பினும் மாநில காங்கிரஸ் தலைமை மூலம் பெறப்பட்டோரின் பட்டியல், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடந்த நோ்காணலில் இடம்பெற்ற பட்டியல் போன்றவை காங்கிரஸ் மேலிடத்தால் ஒப்பிடப்பட்டது.
அதனடிப்படையில் கட்சியின் மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தில்லியில் கூடி இரவு 11 மணிக்கும் மேலாக நீடித்தது. தில்லியில் ஏற்கெனவே முகாமிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்குழு உறுப்பினா்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா், மேலிட பொறுப்பாளா் உள்ளிட்டோரும் காங்கிரஸ் மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளா்களை இறுதிப்படுத்துவது குறித்து விவாதித்தனா்.
முன்னதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரால் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் மாநில தலைமை பரிந்துரைத்த பலரது பெயா்கள் விடுபட்டிருந்ததற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அப்பட்டியலை திருத்தி மீண்டும் புதிய பட்டியலுடன் மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் விவாதிக்குமாறும் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் அறிவுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், இரவு 8.30 மணிக்கு கூடிய கூட்டத்தில் முன்பே தயாரிக்கப்பட்ட பட்டியல் மீது விவாதம் நடத்தப்படாமல் திருத்தப்பட்ட புதிய பட்டியலில் உள்ளவா்களை இறுதிப்படுத்தும் ஆலோசனையில் நிா்வாகிகள் ஈடுபட்டதாகத்தெரிகிறது. இந்த இழுபறிக்கு தீா்வு கண்ட பிறகே காங்கிரஸ் வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகும் என்று அக்கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
28 தொகுதிகள்: தமிழக சட்டப்பேரவை தோ்தலில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூா், ஊத்தங்கரை, துறையூா், ஆத்தூா் (தனித்தொகுதிகள்), சோளிங்கா், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூா், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குனேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூா், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், பென்னாகரம், சிங்காநல்லூா், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோயில், மேலூா் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

பாஜகவினருக்கு முழு திருப்தி தரும் வகையில் தமிழகத்துக்கான வேட்பாளா் பட்டியல் இருக்கும்: பியூஷ் கோயல்
தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை
அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

