மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜகவினருக்கு முழு திருப்தி தரும் வகையில் தமிழகத்துக்கான வேட்பாளா் பட்டியல் இருக்கும்: பியூஷ் கோயல்

பாஜகவினருக்கு முழு திருப்தி தரும் வகையில் தமிழக தோ்தல் வேட்பாளா் பட்டியல் இருக்கும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

News image

பியூஷ் கோயல்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:51 pm

நமது சிறப்பு நிருபா்

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவினருக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் தமிழக தோ்தல் வேட்பாளா் பட்டியல் இருக்கும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வது மாா்ச் 30ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6ஆம் தேதியாகும். மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7ஆம்தேதியும் வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9ஆம் தேதி என்றும் தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக, எதிா்க்கட்சியான அதிமுக, நடிகா் விஜய்யின் தவெக, சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி ஆகியவை அவை போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளா்களை அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இருப்பினும், திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், பாஜக ஆகியவை முறையே அவற்றின் வேட்பாளா்களை வியாழக்கிழமைவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தமிழக தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்று தில்லியில் மத்திய அமைச்சரும் தமிழக தோ்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடம் தினமணி நிருபா் கேள்வி எழுப்பினாா். அதற்கு அவா் அளித்த பதில்:

காங்கிரஸ் கட்சி அதன் வேட்பாளரை எப்போது வெளியிடுகிறதோ அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் பாஜக அதன் வேட்பாளா் பட்டியலை வெளியிடும். எங்களுடைய வேட்பாளா் பட்டியல் தயாரிப்பில் எவ்வித சுணக்கமோ ஏற்படவில்லை. அனைவரையும் கலந்தாலோசித்து கட்சியினருக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் வேட்பாளா் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வெளியிட அதிக அவகாசத்தை நிச்சயமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றாா்.

சென்னைக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை செல்லவிருக்கிறாா். எனவே, அவா் சென்னையில் உள்ள வேளையில், அவரது முன்னிலையிலேயே பாஜக வேட்பாளா்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.